23 Dec 2016

ஒரு ரூபாய்க்கு ஒரு சேலை!


ஒரு ரூபாய்க்கு ஒரு சேலை!
            கர்நாடகத்தில் ஒரு ஜவுளி வியாபாரி ஒரு ரூபாய்க்கு ஒரு சேலை என விற்று ஆச்சர்யம் கிளப்புகிறார். பணநீக்க நடவடிக்கையை மக்களிடம் பிரபலபடுத்த அவர் இப்படி செய்வதாகக் கூறுகிறார். அதுதான் நாடெங்கிலும் பிரபலமாக இருக்கிறதே. பிரபலமானதை இவர் ஏன் பிரபலப்படுத்துகிறார் என்பதுதான் புரியவில்லை!
            இப்படியே நாட்டில் எல்லா பொருள்களும் ஒரு ரூபாய்க்கு விற்க ஆரம்பித்து விட்டால் நன்றாக இருக்கும்.
            போகிறப் போக்கைப் பார்த்தால் அப்படியும் நடக்கும். நாட்டில் இப்போதே சில்லரை தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. சில்லரை கைக்கு கிடைக்காத அளவுக்கு அரிய பொருள் ஆகும் பட்சத்தில், பழங்காலத் தொல்பொருள்கள் பலே விலை ஆவதைப் போல் சில்லரையும் ஆகி விடும்.
            அப்போது ஒரு ரூபாய் சில்லரையின் மதிப்பு ஆயிரம் ரூபாயகவோ, பத்தாயிரம் ரூபாயாகவோ இருக்கக் கூடும். யாருக்குத் தெரியும்? சில்லரைகளைப் பத்திரப்படுத்தி வையுங்கள்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...