10 Dec 2016

றெக்க


சிறை
"எங்க தாத்தா சுதந்திரப் போரட்ட தியாகி! ஜெயில்ல ரொம்ப வருஷம் இருந்திருக்கார்!"‍பெருமையாகச் சொன்ன சிதம்பரநாதன், "இப்போ உங்க தாத்தா எங்க?" என்ற சதீஸ் கேட்ட கேள்விக்குப் பட்டென்று சொன்னான், "முதியோர் இல்லத்துல!"
*****

றெக்கை
கிளி பறந்து போனதும் ஆரம்பித்தது கிளி ஜோசியக்காரனுக்குக் கெட்ட காலம்.
*****

ஸ்பீடு
"நாப்பது கிலோ மீட்டர் ஸ்பீடுல போனா எப்படா போய் சேர்றது?" என்று ராகவன் சொல்லி முடிப்பதற்குள், எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் அவர்களை முந்திக் கொண்டு சென்ற பைக் ஆக்சிடெண்ட் ஆகிக் கிடந்தது.
*****

பட்டா
"சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்! பட்டா மாத்தறது கஷ்டம்!" என்றதும், "நம்ம ஏரியாவுல ஏரி, குளம் இன்னும் இருக்கிறதுக்கு இவர்தான் காரணம்! நல்லா இருக்கட்டும்!" என்று வாழ்த்தி விட்டு வெளியே வந்தார், பதினைந்து வருடமாக பட்டா வாங்க அலைந்து கொண்டிருக்கும் பரந்தாமன்.
*****

காரணம்
ஏரி மேல் கட்டியிருந்த அலுவலகத்தில் இருந்து விவாதித்துக் கொண்டிருந்தார் ஆணையர், "இந்தத் தடவை வெள்ளச்சேதம் அதிகமானதுக்கு என்ன காரணம்?"
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...