11 Dec 2016

உதாரண புருஷர்கள்


உதாரண புருஷர்கள்
முதன் முதலில்...

நானறிந்து கேள்விப்பட்டது
சந்திரன் சாரும்
விமலா டீச்சரும்
காதலித்ததுதான்.

புழக்கடையில்
புகைவிட்டுப் பார்த்தது
மனோ மாமாதான்.

குடித்து விட்டு
வாசல் படியருகே
வேட்டியவிழ
வாந்தியெடுத்துக் கிடந்தது
டியூசன் மாஸ்டர்
தனபால்தான்.

ஹான்ஸை உதட்டுக்குள்
அப்பிக் கொண்டு
குறுகுறுவெனப் பார்த்தது
தோழன் என்று சொல்லிக் கொண்ட
ஈஸ்வரன்தான்.

"அப்படியென்ன
பெரிய தப்பா பண்ணிட்டார்?"
என்று
கட்டிய கணவன்
கூத்தியாள் வீட்டுக்குப்
போய் வந்ததை
சாமர்த்தியமாக மறைத்தது
அம்மாதான்.

சத்தியமாய் பொய் என்று
தெரிந்தும்
பொய் சத்தியம் பண்ணி
பங்காளிகளின் அத்தனைச்
சொத்துகளையும் அபகரித்தது
அப்பாதான்.

எல்லாரும்
சந்திக்கும் போது
யோக்கியமாய் இருப்பதன்
அவசியத்தை மட்டும்
தவறாமல் பேசி விட்டுச் செல்கிறார்கள்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...