10 Dec 2016

இப்படியே போனால் . . .


இப்படியே போனால் . . .
எந்த ஏ.டி.எம்.இல்
பணம் கிடைக்கும் என்று
சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்
ஜோசியர்கள்!
*****
ஏ.டி.எம்.மில்
பணம் எடுப்பதை
செல்பி எடுத்து
பதிவிடுவார்கள்!
*****
செய்திகளில்
வானிலை அறிக்கையோடு
ஏ.டி.எம். வரிசை நிலை அறிக்கை
வாசிப்பார்கள்!
*****
"எங்கு பணம் கிடைக்கிறது?
ஆப்சன் ஒன் - ஏ.டி.எம்.,
ஆப்சன் டூ - பேங்க் கியூ"
என்று டாக் ‍ஷோ நடத்துவார்கள்!
அதில்,
"ரெண்டுமே இல்ல.
ரெய்டு பண்ற இடத்துல மட்டும்தான்
பணம் கிடைக்குதுங்க!"
என்று பதில் சொல்வார்கள்!
*****
உள்ளாட்சித் தேர்தல் வாக்குறுதிகளில்
ஒன்றாக
"பணம் தரும் ஏ.டி.எம்.கள் அமைக்கப்படும்"
என்பது இருக்கும்!
*****
வாக்கு வங்கியில்
பணம் எடுக்க முடியுமா என்று
தலைவர்கள் யோசிப்பார்கள்!
*****
மற்றவர்களைக்
கவர நினைப்பவர்கள்
ஏ.டி.எம். மிஷின் பிரிண்ட் செய்த
டீ சர்ட்டைப்
போட்டுக் கொண்டு அலைவார்கள்!
*****
"என் பொண்ணு பொறந்தப்ப
வீட்டை விட்டுப் போனவரு!
இப்ப பேத்தி பொறந்தப்பதான்
திரும்ப வந்துருக்காரு!"
என்று
ஏ.டி.எம்.இல்
பணம் எடுக்கப் போன
புருஷன்களைப் பற்றிய
மனைவிமார்களின் புலம்பல்களைக்
செய்திச்  சேனல்களில் பார்க்கலாம்!
*****
பணம் இல்லாம இருக்கேன் என்பதை
ஏ.டி.எம். மிஷின் போல இருக்கேன்
என்று
உவமைகள் அமைத்து எழுதுவார்கள்!
*****
பைசா காசுக்குப்
பிரயோஜனம் இல்லாத பிள்ளைகளை
ஏ.டி.எம். மிஷின் என்று
தாய்மார்கள், தந்தைமார்கள்
திட்டுவார்கள்!
*****
பேங்க் வரிசையில் நிற்கும்
தாடி ஆசாமிகளைப் பார்த்தால்
அவர்கள் பணம் எடுக்க
நீண்ட காலமாக
நின்று கொண்டிருப்பவர்கள்
என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!
*****
ஏ.டி.எம்.ல பணம் எடுக்க முடியாமல்
சாமியார் ஆனவர்களைப்
பார்க்க நேரிடலாம்!
*****
"இந்த ஏ.டி.எம்.லேர்ந்து
24 மணி நேரத்துக்குள்ள
ரெண்டாயிரம் ரூபாய்
பணம் எடுக்கணும்னு!"
என்று
ஹீரோவுக்கு வில்லன் சவால் விடும்
திரைப்படங்கள் வரக் கூடும்!
*****
"ஏன் கள்ளநோட்டு அடிச்சே?"
என்பதற்குப்
பிடிபட்டவர்கள்
"கால்கடுக்க வரிசையில
நிற்க முடியல சார்!"
என்பதைப்
பதிலாகச் சொல்லலாம்!
*****
"கருப்புப் பணத்தை ஒழித்து விட்டால்,
வரும் தேர்தலில்
நான் எப்படி உங்களுக்கு
பணம் கொடுக்க முடியும்
வாக்காளப் பெருமக்களே?"
என்று தலைவர்கள் கேட்கலாம்!
*****
"பேங்குக்கு போய்ட்டு வாங்க!"
என்று
தாத்தாக்களைப் போகச் சொன்னால்,
அவர்கள்
"என்னைக் கொல்லப் பார்க்குறாங்க"ன்னு
சொல்லிக் கொண்டு
வீட்டை விட்டு
ஓடப் பார்க்கலாம்!
*****
"பேங்கல பணம் எடுக்கப் போயிருக்காங்க!
யாரும் சீக்கிரமா வர மாட்டாங்க!"
என்று
நடுவீட்டிலே சரக்கு அடிக்க
நண்பர்கள்
நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்!
*****
எல்லாரும் வர்ற மாதிரி
படம் எடுக்க ஆசைப்படுபவர்கள்
"ஏ.டி.எம்" என்ற டைட்டிலைப்
பதிவு செய்து வைக்கலாம்!
*****
ஆஸ்பிட்டலுக்கு போகின்ற
வியாதிக்காரர்கள்
"சில்லரையாகக் கொடுக்கவும்!"
என்ற போர்டைப் பார்த்து
மயக்கம் அடித்து விழலாம்!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...