27 Dec 2016

டைமிங்


அர்த்தம்
"யாகாவாராயினும் நாகாக்க... ன்னா என்னப்பா?" என்றான் ராகவன். "போ! அம்மாகிட்டே கேளு!" என்று அவரைத் திட்டிக் கொண்டிருந்த சிவகாமியிடம் அனுப்பி வைத்தார் ராமநாதன்.
*****

ஐ. டி.
"உன் பேஸ்புக் ஐ.டி.?" கேட்டவனிடம், பேக் ஐ.டி.யைக் கொடுத்தான் பொய்யாமொழி.
*****

தயாளன்
"பீஸ் கொடுக்க காசில்ல! ஒரு லிட்டர் ரத்தம் எடுத்துக்கோங்க டாக்டர்!" என்றான் பேஷண்ட் பரமதயாளன்.
*****

அறிவுரை
"டிரைவிங்ல செல்போன் பேசாதே!" அறிவுரைச் சொல்லிக் கொண்டு இருந்தார் அப்பா, டூவீலரில் சென்று கொண்டிருந்த மகனுக்குப் போன் போட்டு.
*****

டைமிங்
"கரண்ட் கட்! பெர்பெக்ட் டைமிங்! ஓ.கே. ஸ்டார்ட்!" தயாரானார்கள் திருடர்கள்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...