27 Dec 2016

நல்லா காட்டுறாங்க!


நல்லா காட்டுறாங்க!
            புதிய ஐநூறு ரூபாய் நோட்டை கடையில் கொடுத்த போது ஆச்சர்யமாகப் பார்த்தார் அண்ணாச்சி. அது பழைய ஐந்து ரூபாய் நோட்டைப் போலவும், ஐம்பது ரூபாய் நோட்டை விட சிறியதாக இருப்பதாகவும்  பிரஸ்தாபித்தார்.
            அதை கண்ணில் ஒற்றிக் கொண்டு கல்லாவில் போட்ட அண்ணாச்சி, "நீங்கதான் தம்பி முதன் முதல்ல புதிய ஐநூறு ரூபாய்த் தாளை கொண்டு வந்து இருக்கீங்க!" என்று சொன்னதும் புளங்காகிதம் விண்ணைத் தொட்டது.
            "இப்போ சில்லரை இல்ல. சாயுங்காலம் கடைப்பக்கம் வர்றப்ப வாங்கிக்குங்க!" என்று அவர் சொன்னது காதில் புகை மூட்டமாக வந்து இறங்கியது.
            "சரி! அந்த நோட்டைக் கொடுங்க! நான் சாயுங்காலம் வர்றப்ப காசைக் கொடுத்துடறேன்!" என்ற போது கடைக்கார அண்ணாச்சி சொன்னார், "எங்கிட்டேயே இருக்கட்டும் தம்பி! ஒரு நாலு பேர்கிட்டயாவது காட்டணும்!"
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...