27 Dec 2016

புகுதல்


இழப்பு
மணல் அள்ளிய ஆறு
கிடக்கிறது
முலை இழந்தப் பெண்ணாய்!
*****

என்க...
இழந்தால்தான்
கிடைக்கிறது என்கிறோம்
கிடைத்ததால்தான்
இழக்கிறோம் என்பதை
மறந்து!
*****

புகுதல்
யானைகளின் பாதை
நமது நெடுஞ்சாலைகளாகின்றன!
வழிதவறி வந்து விடுவதாக
குடியிருப்புகளில்
புகுந்து விடும் யானைகளை
சபித்துக் கொண்டு இருக்கிறோம்!
தமது பாதைகள் பறிபோன
அநியாயத்தை ஆண்டுதோறும்
கேட்டுக் கொண்டு இருக்கின்றன
யானைகள்
அங்கங்கே புகுந்து!
*****

சொல்பயன்
வெளிவராத ஒற்றைச் சொல்
கடைசி வரை
கிடக்கிறது
ஒற்றைச் செருப்பைப் போல!
*****

பழக்கம்
காடுகள் மறுக்கப்பட்ட
யானைகள்
பழகி விடுகின்றன
கோயில்களில் வாழ!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...