17 Dec 2016

ராஜாவின் இருப்பு


காலங்கள்
முகத்தில் சுருக்கங்களோடு
பொக்கை வாயோடு
பாட்டியொருத்தி
பள்ளிக்கூடம் முன் அமர்ந்து
நாவல் பழமோ
இலந்தைப் பழமோ
விற்றது நினைவுக்கு வருவது
அந்தக் காலம்!
பிள்ளைகள் கைவிட
அதே முகச்சுருக்கங்களோடும்
பொக்கை வாயோடும்
பிச்சைப் பாத்திரம்
கையிலேந்தி
கோயிலொன்றில் அமர்ந்திருப்பதை
காணக் கிடைப்பது
இந்தக் காலம்!
*****

ராஜாவின் இருப்பு
ஊர்கள்
நகரங்களாகி விட்டப் பிறகு
இன்னும்
இருந்து கொண்டு இருக்கிறார்
கதைகளில் மட்டும்
"ஒரு ஊர்ல ஒரு ராஜா!"
*****

மாற்றம்
ஆகப்பெரும் ஏரியை
தூர்த்து மூடி
பேருந்து நிலையமாய்
மாற்றிய பிறகு
நகராட்சி ஆகிறது
பேரூராட்சி!
*****

தீர்வுகள்
பல இடங்களில்
சாக்லேட்டுகள்
தீர்த்து வைக்கும்
சில்லரைச் சிக்கல்களை!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...