8 Dec 2016

மாவீரன் கிட்டு


மாவீரன் கிட்டு
வெண்மணித் தீ
திண்ணியம்  மலம்
சாணிப்பால்
சவுக்கடி
            என்று இந்த தேசத்தின் சாதியக் கறைகள் நிறைந்த வரலாற்றை எழுத்திலக்கியங்கள் பதிவு செய்தது நிறைய. காட்சி இலக்கியங்கள் பதிவு செய்தது குறைவு. அந்தக் குறையைப் போக்க வந்திருக்கும் திரைப்படம்தான் மாவீரன் கிட்டு.
            பெரும்பாலும் பெண்களைத் தோலுரித்துக் கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கும் கோடம்பாக்கக் கொத்துபரோட்டாக்களுக்கு மத்தியில், அதிகாரம் எவ்வாறு அதி காரமாக மாறுகிறது என்பதைத் தோலுரித்துக் காட்டி மாவீரன் கிட்டு செய்திருப்பது நிஜ கலாட்டா.
            தமிழ்த் திரையுலகிற்கு கபாலியை விடவும் கிட்டுவும், சின்ராசுக்களுமே அதிகம் தேவை.
            இளவரசன் என்ற பெயருக்காவே உயிரை எடுக்கும் இந்த சமூகத்தில், இது போல மறுமலர்ச்சியைக் கொடுக்கும் படங்களை ஏன் முயன்று பார்க்கக் கூடாது "ஜென்டில்மேன்" ஷங்கர்கள்?
            வெண்ணிலா கபடிக் குழு
            அழகர்சாமியின் குதிரை
            ஜீவா
                        வரிசையில் மாவீரன் கிட்டுவை அழைத்து வந்ததற்காக சுசீந்தரனுக்கு தனித்த வணக்கம்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...