9 Dec 2016

நல்லாட்சி


கை வண்ணம்
"எல்லாம் உன் கை மணம்! அப்படியே எங்க அம்மா மாதிரி!" என்று ஜேம்ஸ் சொன்னதற்குச் சிரித்துக் கொண்டாள் ரெசிபியைப் பார்த்து சமைத்த ரக்சிதா.
*****

நல்லாட்சி
இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கையில் வாங்கிக் கொண்டு முத்துப்பாண்டி கேட்டான், "உங்களுக்கு ஓட்டுப் போட்டா நேர்மையா ஆட்சி நடத்துவீங்களா?"
*****

மிரட்டல்
அரெஸ்ட் பண்ண வைத்த ஆளுங்கட்சியை மிரட்டினார், எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம், "அப்ரூவராய் மாறிடுவேன் ஆமா!"
*****
செல்பி
தன் பெயர் தாங்கிய பெயர்ப்பலகை தெரிய, கடைசியாக செல்பி எடுத்துக் கொண்டார், பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் கந்தசாமி.
*****

ஓ .கே .!
"ஆட்சியில பங்கு கொடுக்க முடியாது!" என்றதும் தலைவர் தண்டபாணி இறங்கி வந்தார், "ஆளுநர் பதவி கொடுத்தாலும் ஓ.கே.தான்!"
*****

1 comment:

  1. சிறப்பான கதைகள்! வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...