24 Dec 2016

மறுமுகம்


மறுமுகம்
            காங்கிரஸ் ஆட்சிக்கெதிராக இன்னொரு காங்கிரஸ் ஆட்சியையே பிரதமர் மோடி அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கையில் எடுக்கத் தயங்கிய பல விசயங்களை தைரியமாக முன்னெடுக்கிறார்.
            விளைவுகள் எப்படி இருந்தாலும், பணமாற்ற நடவடிக்கை அவரை இந்திய வரலாற்றில் அவரை மறக்க முடியாத மனிதராக மாற்றப் போகிறது.
            மன்னர் மானிய ஒழிப்பு, நில உச்ச வரம்பு, வங்கிகள் தேசிய மயம் என்று இந்திரா காந்தி அவர்கள் கையிலெடுத்த அதே வழிமுறையைத்தான் பிரதமர் மோடி அவர்களும் பணமாற்ற மதிப்பு என்ற வகையில் கருப்புப் பண ஒழிப்புக்கு எதிராக கையில் எடுத்து இருக்கிறார்.
            பணமாற்ற மதிப்பு என்பது முகத்துக்குப் பின் தூக்கி நிறுத்துமா? முகமது பின் துக்ளக் போல ஆக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
            ஏறத்தாழ இந்தப் பணமாற்ற நடிவடிக்கை மூலம் அனைத்து மாநிலங்களின் தலைமையையும் அவர் டில்லியின் கட்டுபாட்டில் கொண்டு வந்து விட்டார்.
            மோடி அவர்களைப் பற்றி நினைக்கும் போது, ஒபாமா இந்தியா வந்திருந்த போது அவர் அணிந்திருந்த கோட் ஆடையே நினைவுக்கு வருகிறது. அதில் அவர் பெயர் மெல்லிதாக ஒரு கோடு போல பொரிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளிவந்தன. மிக விலை உயர்ந்த ஆடையான அது அநேகமாக அவரது வருமான வரம்புக்கு உட்பட்டே வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.      
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...