24 Dec 2016

மண்ணுக்குள்ள என்ன இருக்கு?


மண்ணுக்குள்ள என்ன இருக்கு?
            தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வரை வருமான வரி சோதனை நடத்தியாகி விட்டது. இனி யார் யார் வீட்டில் எல்லாம் சோதனை நடத்த வேண்டுமோ?
            தமிழகத்தின் பொருளாதாரமே மணலில் இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. மணலை வைத்து வீடு கட்டுபவர்கள் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதை வைத்து கல்லா கட்டுபவர்கள் புல்லா கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
            தமிழகத்தின் வறட்சி கண்டு கொள்ளாமல் விடப்பட்டதற்குக் காரணம் கூட இந்த மணல்தான். தொடர்ந்து வறட்சி நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் பாலைவனமாகி விடும் அல்லவா! பாலைவனத்தில் என்ன இருக்கும்? மணல்தானே இருக்கும். தமிழகமே மணலாகி விட்டால் . . . ஆளாளுக்கு மணல் அள்ளியே பணம் பார்க்கலாம். இப்படி உழுது, விதைத்து, அறுத்து, அதற்குச் சரியான விலை கிடைக்காமல் அல்லல் இல்லை பாருங்கள்.
            பெட்ரோல் விற்பனை செய்யும் ஓபெக் நாடுகள் போல அப்புறம் தமிழகம் மணல் விற்பனை செய்யும் உலகின் முக்கிய பொருளாதார‍ கேந்திரியமாக மாறக் கூடும். சர்வதேச சந்தையிலும் அன்றைய மணல் விலை நிலவரம் டிரேடிங் ஆகக் கூடும்.
            மண்ணை வாரி இறைத்து மண்ணோடு மண்ணாகப் போகட்டும் என்று சபிப்பது எல்லாம் அந்தக் காலம். மண்ணை வாரி இறைத்து பணத்தோடு பணமாக ஆகட்டும் என்று காசு மேல காசு பார்ப்பது இந்தக் காலம்.
            மண்ணோடு மண்ணாகப் போக என்று சபித்தால் மணல் அள்ள வந்து விடுவார்கள் போல.
            "முத்துக் குளிக்க வாரீகளா? நெஞ்சை அள்ளிப் போறீகளா?" என்பது போல "மணல் அள்ள வாரீகளா? பணத்தைக் கட்டுக் கட்டா அள்ளிப் போறீகளா?" என்ற பாட்டுக்கு ஏ.ஆர். ரகுமானை விட்டுதான் மியூசிக் போடச் செல்ல வேண்டும். டைமிங் ஹிட் ஆகும்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...