9 Dec 2016

காலச்சுமை


காலச்சுமை
அடியையும் வேதனையையும்
சுமந்தபடியே
பிறந்த வீட்டிற்கு வருபவள்
தாய் தந்தை முகத்தைப்
பார்த்த மாத்திரத்திலே
அடிநெஞ்சில் புதைத்துக் கொள்பவள்,

"என்னை நல்லாத்தான்
பார்த்துக்குறார்!"
என்று
சொல்லி முடிப்பதற்குள்
உருண்டு வந்து விழும்
கண்ணீர்த் துளிகளை
யாரும் அறியாது
துடைத்துக் கொள்பவள்,

யாருக்கும் சுமையாகி விடக்
கூடாதென
ஒற்றை நினைப்பில்
அவளை ஒரு காலச்சுமையாய்
நெஞ்சில் சுமக்க
வைத்து விடுகிறாள்
மணமான
சுபயோக சுபதினம்
நிறைவடைந்த ஓராண்டிற்குள்
தூக்கில் தொங்கி!
*****

கவசங்கள்
தர்மம் தலைகாக்கும் நாட்டில்
ஹெல்மெட் அணிந்து பயணிப்பவர்கள்
அநேகம்.
ஐ.எஸ்.ஐ. தரத்தோடு இருப்பினும்
தண்ணீர் லாரிகளும்
பள்ளத்தாக்குக் குழிகளும்
புரியா வேகத்தடைகளும்
நிறைந்த சாலையில்
ஹெல்மெட் 
உயிர்க் காப்பதோடு
குடிக்காமல் வாகனம் செலுத்தும்
ஒவ்வொருவரும்
எதிரே வருபவர்க்கு
தலைக்கவசமாய் நின்று காப்பர்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...