25 Dec 2016

மறந்திடாதீங்க!


பதற்றம்
"இங்க தப்பிச்சிட்டேன்! அங்க தப்பிக்கணுமே!" என்று ஹை கோர்ட் படிகளைத் தாண்டி, சுப்ரீம் கோர்ட்டில் காலடி எடுத்து வைப்பதைப் பற்றி நினைத்துப் பார்த்தார் நீதிராஜன்.
*****

மறந்திடாதீங்க!
"மறந்திடாம சாப்பிடுங்கப்பா!" என்றான் கையில் இருந்த மாத்திரைகள் அடங்கிய கேரி பேக்கைக் கொடுத்து பஸ் ஏற்றி விட்ட மகன்.
*****

ப்ளாப்
"இது வரைக்கும் திருட்டு டிவிடி வரல சார்!" என்றதும், "அப்போ படம் ப்ளாப்தான்!" என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டார் தயாரிப்பாளர்.
*****

டை
"என்னங்க! பொண்ணு வயசுக்கு வந்துட்டா!" என்று நிர்மலா சொன்னதும், "இனிமே தலைக்கு டை அடிச்சுக்கிறதை நிறுத்திப்போம்!" என்றான் சீதாராமன்.
*****
நிரப்புதல்
என்கெளண்டரிலிருந்து தப்பி வந்தவனை, அடித்துத் தூக்கி விட்டுப் போனது தண்ணீர் லாரி.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...