28 Dec 2016

தறுதலை


தறுதலை
"படிக்காம தறுதலையா சுத்துறான்பா!" என்று தன் மகனைப் பற்றி கவலைபட்ட நண்பனிடம், "என்னோட கோர்த்து விடுப்பா! நான் பார்த்துக்கிறேன்!" என்றான் பேட்டை ரவுடி கோவிந்தன்.
*****

வேலை
"படிச்சாத்தான் வேலைக்குப் போக முடியும்!" என்ற அம்மாவைப் பார்த்து, மகன் கேட்டான், "அப்புறம் ஏன்மா டிகிரி வரை படிச்சிட்டு நீ வேலைக்குப் போகல?"
*****

புலனாய்வு
மனநலக் காப்பகத்தில் நடைபெற்ற போலீஸ் புலனாய்வின் முடிவில் வெளிப்பட்டது, ஐந்து வருடத்தில் நடைபெற்ற ஐம்பது மரணங்கள்.
*****

அரசியல்
"நீங்க விட்டுக் கொடுத்தா போஸ்டிங் எனக்குத்தாண்ணே!" என்றார் நமச்சிவாயம். பெட்டியை வாங்கிக் கொண்டு கட்சி மாறிக் கொண்டார் பெத்தபெருமாள்.
*****

கல்லானாலும் . . .
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விழுந்த கற்களை, திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்.பி.ஆர். கிரானைட் வேர்ல்டின் முதலாளி நாகப்பன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...