28 Dec 2016

மிதப்பு


செய்தி
"அணு ஆயுதப் போர் தொடங்கி விட்டது" என்ற செய்திக்குரல் அதன் பின் வாசிக்கவில்லை.
*****

மிதப்பு
நடுக்கடலில் லைப் ஜாக்கெட்டோடு மிதந்து கொண்டிருந்தான் நான்கு நாளுக்கு முன்பே இறந்து விட்ட அகதி.
*****

வேணாம்
"இது சுட்டப்படம் கிடையாது சார்!" என்றார் வாய்ப்பு கேட்டு வந்த இயக்குநர். "தெரியுதுப்பா! அதனாலதான் வேணாங்றேன்!" என்றார் புரடியூசர் முத்தப்பன்.
*****

போர்
திரெளபதியைத் துகிலுரிந்து பேஸ்புக்கில் போட்டான் துரியோதனன். வாட்ஸ் அப்பில் தொடங்கியது குருஷேத்திரப் போர்.
*****

பாதியும் முழுமையும்
பாதி மணல், பாதி சிமெண்ட் என்று வாங்கிக் கொடுத்த ஒப்பந்தக்காரர், அதிகாரிக்கு புல் செட்டில்மெண்டையும் முடித்திருந்தார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...