25 Dec 2016

மரணம் எனப்படுவது . . .


மரணம் எனப்படுவது . . .
            நோய் மட்டுமே மனிதனை மரணிக்க வைக்க முடியாது. நோயின் சர்வ வல்லமையை பல் பிடுங்கி வைத்திருக்கிறது இன்றைய நவீன மருத்துவம்.
            இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க சாதனங்களை வைத்திருக்கிறது நவீன மருத்துவம். உடல் நோய்களை இன்றைய மருத்துவம் வென்று விட்டது.
            அதனால் வெல்ல முடியாத ஒரு விஷயம் மனவியல் நோய்கள்தான்.
            அநேக மனவியல் சார்ந்த நவீன மருந்துகள் உறங்க வைக்கின்றன. அல்லது மூளையின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றன. அல்லது போதைத் தன்மைகள் கொண்டவைகளாக இருக்கின்றன.
            மனவியல் நோய்களில் நவீன மருத்துவம் பெற்ற வெற்றி அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
            மனதளவில் விழுந்து விட்ட ஒரு மனிதரை உடலளவில் காப்பாற்றுவது என்பதும் சவாலான விஷயம். மனம் திடமாக இருந்தாலொழிய நவீன மருத்துவமாக இருந்தாலும் உடலைக் காப்பாற்றுவதில் தோற்று விடும்.
            மனம் என்பது ஒவ்வொரு தனிமனிதரிடம் இருக்கிறது. மனதளவில் பலமாக, வளமாக, நலமாக இருந்தால் உடலளவு நோய்களையும் மருந்துகள் இன்றி எதிர்கொள்ள முடியும்.
            மனதளவில் படுத்து விட்டால் உடல் படுக்க ஆரம்பித்து விடும். அதை எந்த மருந்து மாத்திரைகளாலும் தடுக்க முடியாது.
            மரணம் என்பது மனதைக் கேட்டுக் கொண்டுதான் ஒரு மனிதனுக்குள் நுழைகிறது என்பது அறியப்படாத ரகசியம். நீங்கள் அனுமதிக்காமல் மரணம் உங்களை அணுக முடியாது.
            "வாடா! காலனே! உன்னைக் காலால் எட்டி உதைக்கிறேன்" என்பது பாரதி சொன்னது. அவ்வளவு மனோதிடத்தின் முன் சாவு செத்து விடும்.
            வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளை நாம் தேடிக் கொள்வதைப் போல மரணத்தையும் நாம் தேடிக் கொள்கிறோம். கோடி கோடியாக தேடிக் கொள்பவர்கள் முன்வரிசையில் அதை தேடிக் கொள்கிறார்கள்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...