போர்ப்ஸ் பத்திரிகையில் கவனம் பெறாத
நெ.1. பணக்காரர்கள்!
இந்தியாவில்
அதிக வருமான வரிச் சோதனைகள் நடைபெறும் மாநிலம் எது? தமிழ்நாடாகவும் இருக்கலாம்.
"தெற்கத்திக்காரன்
சொத்து சேர்த்தது வடக்கத்திக்காரனுக்குப் பிடிக்கல. அவனுங்கல விட செமையா சேர்த்துருக்கிறானுங்க.
விடுவானுங்களா?" டீக்கடைப் பெஞ்சுகளில் வெளிநடப்பு நடக்கும் அளவுக்கு விவாதம்
சூடு பறக்கிறது.
"சென்னையின்
ரிமோட் கன்ட்ரோல் இப்போ டெல்லியிடம்! ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ?"
என்று பார்ப்பவர்கள் எல்லாம் பஞ்ச் டயலாக்குகளைப் பறக்க விடுகிறார்கள்.
ஆயிரம்
ரூபாய் நோட்டுகளைப் பார்க்காமல் இன்னும் கோடானு கோடி மக்கள் வாழும் நாட்டில் பல
ஆயிரம் கோடிகளுக்கு சொத்து சேர்ப்பவர்களைப் பார்க்கும் அபூர்வ தேசம் இது.
உலகின்
பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகையின் கண்ணில் மண்ணை தூவி விட்ட
இந்த மாபதகர்களால், உலகப் பணக்காரன் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை நமது நாடு இழந்து
விட்டது.
இப்போது
மேலே உள்ள கேள்விக்கு வருவோம். இந்தக் கேள்விக்கு விடை தேடும் போது, தமிழகம் டில்லியின்
நிழலாட்சியின் கீழ் வந்து விட்டதோ? என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எது
குறித்து கேள்வி கேட்டாலும் மெளனமே பதிலாக கிடைப்பதால், சந்தேகம் வலுப்பெறுகிறது.
தமிழகத்தைப்
பொருத்த வரையில் சொத்துக் குவிப்பு வழக்குகள் ஆச்சர்யத்திற்கு உரியதல்ல. ஏற்கனவே
பல வழக்குகள் நடந்தன. தற்போது நடந்து கொண்டு இருக்கின்றன. இனியும் நடக்கும். இது
இங்குள்ள தலைவர்களின் ஜீன்களில் ஊறி விட்டது.
சொத்து
சேர்க்காவிட்டால் இங்குள்ள தலைவர்கள் எதையோ இழந்து விட்டது போல பித்து பிடித்தவர்களாகி
விடுகிறார்கள்.
ஒரு
காலத்தில் காமராசர், கக்கன் போன்ற சொத்து சேர்க்காத அரசியல் தலைவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் முகத்தில் கரியை அள்ளி பூசுவதற்கென்றே வந்தவர்கள்தான் பிற்கால அரசியல்வாதிகள்.
இவர்களில், சொத்து சேர்க்காத அரசியல் தலைவர்களைப் பார்ப்பது காவிரியில் தண்ணீர் வருவது
போல அரிதாகி விட்டது. இவர்களால்தான் தற்போது தமிழகத்தில் பெய்யும் மழையும் பெய்யாமல்
போய் விட்டது. காவிரியில் வரும் தண்ணீரும் வராமல் போய் விட்டது.
ஒவ்வொரு
சொத்து குவிப்பு வழக்கின் போதும் தோன்றும் ஒரே கேள்வி - இதை எந்த நூற்றாண்டில் விசாரித்து
முடிப்பார்கள் என்பதே?
ஒவ்வொரு
வருமான வரிச் சோதனையின் போதும் தோன்றும் ஒரே கேள்வி - ஏன் இந்த விசாரணைகள் எப்போது
மூடுமந்திரமாக இருக்கின்றன என்பதே? இதுவரை எத்தனை விசாரணைகளில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு
தண்டனை வழங்கப்பட்டு இருக்கின்றன? ஒருவகையில் காவல்துறை கஞ்சா வழக்குகள் போல் கடைசியில்
ஆகி விடுகின்றன இந்த விசாரணைகள்.
ஆட்சியாளர்கள்
சொத்துக் குவிப்பு விசாரணையில் இருக்கும் அதே நேரத்தில், தற்போது அதிகாரிகளும் சொத்து
குவிப்பு விசாரணையில் சிக்கும் வித்தியாச மாநிலமாக உருபெறுகிறது தமிழகம்.
"ஏ!
தாழ்ந்த தமிழகமே!" என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு புத்தகம் எழுதினார். அது உண்மையாகி
விடும் போலிருக்கிறது.
*****
No comments:
Post a Comment