28 Dec 2016

நெஞ்சு வலிக் கேள்வி


நெஞ்சு வலிக் கேள்வி
(ஓர் அவசியமான முன்னெச்சரிக்கை : குழந்தைகள், இதய பலஹீனம் உள்ளவர்கள், இளகிய நெஞ்சம் படைத்தவர்கள், அதிர்ச்சியைத் தாங்க இயலாதவர்கள் இதை மேற்கொண்டு படிக்க வேண்டாம்)
நெஞ்சு வலி வந்த
ராம மோகன ராவின் பேட்டியை
நேரலை செய்வதற்கு முன்
ஒரு நொடி
இந்த ஊடகங்கள் யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா
பார்ப்பவர்களுக்கு நெஞ்சு வலி வந்தால்
என்ன செய்வது?
அல்லது
நெஞ்சுவலி வந்த அன்னாருக்கே
மீண்டும் நெஞ்சு வலி வந்தால்
என் செய்வது?

மறைந்த முதல்வர் அம்மா அவர்கள்
இருந்திருந்தால்
இப்படி நடந்திருக்குமா என்கிறாரே!
தாயுள்ளம் படைத்ததால்
அம்மா அவர்கள் எந்த தவறையும்
பொறுத்துக் கொள்வார் என்கிறாரோ?
அம்மா இருக்கும் தைரியத்தில்
நடந்து கொள்ளும் தறுதலைப் பிள்ளை போல்
நடந்து விட்டேன் என்கிறாரோ?
தாய்க்கு தலைவணக்கம் செய்யும் பிள்ளை
தலைவர் மோடி அவர்கள்
அம்மாவுக்கு பயந்துதான்
அதிரடிச் சோதனைகள் செய்யாமல் விட்டார் என்கிறாரோ!

இப்போதும் நான்
தலைமைச் செயலாளர் என்கிறாரே!
ஒன்றுக்கு ரெண்டாய்
வாங்கி வைத்துக் கொள்ளும்
கொசுவர்த்திச் சுருள் போலா
தலைமைச் செயலாளர் நியமனம்?
இப்படியென்றால்
இடியாப்பச் சிக்கல் போல
ஆகி விடாதா தமிழகம்?

"கருப்புப் பணம் வைத்திருந்தாலும்
பரவாயில்லை
வரம்பை மீறி ரெண்டாயிரம் வைத்திருந்தாலும்
பிழையில்லை
ஏனென்றால்
நடிவடிக்கைகள் இருக்கப் போவதில்லை
பத்தாண்டுகள் வழக்கு இழுத்தால்
நினைவில் எதுவும் நிற்கப் போவதில்லை
குற்றமதை நிரூபிக்க வாய்ப்பில்லை
அப்படியே நிரூபித்தாலும்
வெள்ளியில் சாமி சிலைகள் இருக்கு?
வீண் அச்சம் எனக்கு எதற்கு?"
என்பதாகத்தான் எண்ணம் உள்ளதோ?
இப்படி ஓர் எண்ணம் வருவதுதான் நல்லதோ?
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...