28 Dec 2016

இரட்டைக் கோபுரத் தாக்குதல்


இரட்டைக் கோபுரத் தாக்குதல்
வாயை மூடிக் கொண்டு
கடிவாளத்தை மென்று கொண்டு
இருக்கும் மக்களே!
"கள்ள மார்கெட்டை மூடுங்கள்!
கருப்புப் பணச் சந்தையை மூடுங்கள்!
கமிஷன் ஆபீஸ்களை மூடுங்கள்!
ஏ.டி.எம்.களை மூடாதீர்கள்!"
என்று வாயை மூடாமல்
கெஞ்சியாவது கேளுங்கள்.

வருமான வரித்துறை ரெய்டில்தான்
ரெண்டாயிரம் நோட்டுகள் வெளிவருகின்றன
என்பதைப் புரிந்து கொண்டவர்களே!
இனி,
ரெண்டாயிரம் நோட்டு இல்லை என்று
சொல்லும் ஏ.டி.எம்.களை எச்சரியுங்கள்
வருமான வரித்துறை ரெய்டு வரும் என்று!

உண்டியலில்
ஒரு ரூபாய் போட்டு
வேண்டிக் கொள்ளும் போது
மறக்காமல் வேண்டிக் கொள்ளுங்கள்
ஏ.டி.எம்.மில் பணம் வர வேண்டுமென்று!

சிந்தித்துப் பாருங்கள்!
கையிலும் பணமில்லை
ஏ.டி.எம்.மிலும் பணமில்லை
வங்கியிலும் பணமில்லை
பணமில்லா பொருளாதாரம்
என்பது இதுதானோ?!

வங்கியில் நிற்பவர்களே!
வரிசையில் நிற்பவர்களே!
உங்கள் கைகளில்
ஒரு ரெண்டாயிரம் நோட்டு கூட
இல்லாத போது
இங்கு எதிலும் நிற்காதவர்களின்
கையில்
ஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல
கட்டுக் கட்டாக
எப்படி ரெண்டாயிரம் நோட்டுகள்?

எதை எதையோ சொல்லி
எப்படி எப்படியோ ஆற்றுப்படுத்துபவர்களே!
இதை எப்படி ஆற்றுப்பத்துவீர்கள்?
தீவிரவாதப் பொருளாதாரம்
கருப்பு-கள்ளப் பண பொருளாதாரம் மீது
தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றா?
இந்தியாவில் இருக்கும்
ஏழைகள் எனும் ஒரு கோபுரம்
நடுத்தர வர்க்கம் எனும் ஒரு கோபுரம்
ஆகிய இரட்டைக் கோபுரங்கள் மேல்
தொடுக்கப்பட்ட
இரட்டைக் கோபுரத் தாக்குதல் என்றா!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...