27 Dec 2016

லைக்ஸ்


ரீ ரிலீஸ்
"ப்ளாப் ஆன படத்தை யார் சார் மறுபடியும் ரிலீஸ் பண்ணுவாங்க?" என்றான் சேகர். "டி.வி.காரங்க பண்ணுவாங்க!" என்றார் புரடியூசர் ரவி.
*****

அடி
கோபமாக அடித்த அப்பாவைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, மகன் சொன்னான், "எங்க ஹாஸ்டல் வார்டன் அடிக்கிறதுல பத்துல ஒரு பங்கு கூட இல்லப்பா, நீங்க அடிக்கிறது!"
*****

கை வரிசை
"கொஞ்சம் கூட காசு கொடுத்திருந்தா, ஏன் அடகு வெச்ச கடையிலேயே கை வைக்கப் போறேன்?" என்று தனக்குத் தானே பேசியபடியே, தன் கை வரிசையைக் காட்டிக் கொண்டிருந்தான் கபாலி.
*****

லைக்ஸ்
"பேஸ்புக் பாத்தியாடா? எப்படி இருக்கு?" என்ற கேட்ட நண்பனிடம், "லைக்ஸ்தான் போட்டேன்டா மச்சி! மேட்டரைப் படிக்கலடா!" என்றான் லைக்ஸ் போட்டவன்.
*****

நடிப்பு
அரசியலில் எடுபடவில்லை என்று தெரிந்ததும், சினிமாவிற்கு நடிக்க வந்தார் தலைவர்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...