27 Dec 2016

காதல் விஷம்


ரகசியம்
முன்னோக்கிப் பயணிக்கும்
காலம்
முன்னோக்கியோ
பின்னோக்கியோ
எப்படியும் பயணிக்கும்
அவரவர் செயல்களுக்கேற்ப
என்பது
அவரவர் மட்டும்
அறிந்த ரகசியம்!
*****

காதல் விஷம்
முடிகள் ஒவ்வொன்றும்
பாம்பு போல் நீள்கிறது!
கண்கள்
பாம்பு படம் எடுப்பது போல்
இருக்கிறது!
பார்வையால் தீண்ட
காதல் விஷம்
ஏறிக் கொண்டிருக்கிறது
உன்னிடமிருந்து
எனக்குப் போதையைப் போல!
*****

உணவு
புல்
இலை
தழை
எனப் போட்டு
ஒரு நாள்
தின்று விடுகிறோம்
ஆட்டை!
*****

ஒரே வானம்
பறவைகள் நூறு
சிறகுகள் ஆயிரம்
ஒரே வானம்!
*****

பின்...
கூண்டுக்கிளி
வாங்கிக் கேட்ட
மகனுக்கு
வாங்கித் தந்தேன்
மரக்கன்று!
நட்டு
மரமான பின்
கூண்டில்லாமலே வந்தன
கிளிகள்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...