7 Dec 2016

லேப் டாப்


கண்டுபிடிப்பு
ஷிங் பிங் சுவான் கேட்டார், "தமிழ்நாட்லேர்ந்துதானே வர்றீங்க?"
"எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?" ஆச்சர்யம் விலகாமல் கேட்டார் கே.பி.ஆனந்தசெல்வம்.
சிரித்துக் கொண்டே சொன்னார் சீனாவின் ஷிங் பிங் சுவான், "ஸ்டிக்கர் ஆர்டர் பண்ணதை வெச்சுதான்!"
*****

ஹெல்மெட்
"ஹெல்மெட் போட்டிருந்தா பிழைச்சிருப்பார் சார்! நான்தான் ‍ஹெல்மெட்ல வாங்கி வெச்சிருந்த தக்காளியை எடுத்து வைக்க அலுப்புபட்டுகிட்டு இன்னிக்கு ஒரு நாளைக்கு ஹெல்மெட் இல்லாம போங்கன்னு சொல்லிட்டேன்!" அழுதாள் மிஸஸ் நந்தினி.
*****

ரோல்
"வில்லன் ரோல் பண்ண அர்னால்ட்கிட்ட பேசிகிட்டு இருக்கோம்! சீக்கிரமே அறிவிப்பு வெளியாகும்!"
முதன் முறையாக ஹீரோ டிரெண்டைப் பிடித்து ஹிட் அடித்தது வில்லன் ரோல்.
*****

போட்டுக் கொடு
"மம்மி! பீப் சாங் கேட்குறார் டாடி!" என்றான் ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு எம்.டி.வி. பார்த்துக் கொண்டிருந்த சுதீப்.
*****

லேப் டாப்
விலையில்லா லேப் டாப்பை வாங்கிக் கொண்டு, விலையில்லா மிதி வண்டியில் வேக வேகமாக சென்று கொண்டிருந்தாள் பள்ளியில் நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டிருந்த சிறுநீரை வீட்டிற்குச் சென்ற கழிக்க.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...