6 Dec 2016

ரெய்டு


எங்கே?
"டாட்! இங்க இருந்த ரிவர் எங்கே?" என்றான் பாலத்தின் மேல் காரில் சென்று கொண்டிருந்த யுவன் அப்பா மோகன்குமாரிடம்!
*****

ரெய்டு
ரெய்டு வருவதைக் கேள்விப்பட்ட சுவாமிகள் ஹோமத்தை வேக வேகமாகச் செய்து முடித்தார்.
*****

டெளரி
"ஐ லவ் பிரனேஷ்!" என்ற சுசித்தாவிடம் அப்பா கேட்டார், "டெளரி கேட்க மாட்டான்ல!"
*****

கூலிங் பாய்ண்ட்
"கூலிங் ரூம்ல சூசைட் பண்ணிட்டான் சார்!" ஆத்மநாதன் சோகமாகச் சொல்ல, "கூலர் பாக்ஸ் வந்துட்டு! சீக்கிரம் தூக்கிட்டுப் போங்க!" என்றார் மேனேஜர்.
*****

கரெக்சன்
"டோட்டல்ல மூணு மார்க் குறையுது மிஸ்!" என்று ஸ்டீபன் சொன்னதும், அவசர அவசரமாக அவன் பேப்பரை வாங்கிய கோகிலவாணி மிஸ் ஒரு பதிலுக்கு போட்டிருந்த ஐந்து மார்க்கை அடித்து இரண்டு மார்க்காக்கிக் கொடுத்தார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...