26 Dec 2016

சாட்சி


ஓர் இடம்
"அவுட்டர்ல ஒரு இடம் வாங்கிப் போட்டா போதும்!" என்றான் பரிதாபமாக, நகரின் மையத்தில் மூன்று தனி வீடுகளை வாங்கிப் போட்டு இருந்தவன்.
*****

ஸ்டார்ட்
"அப்படியே ஒரு எட்டுப் போய், கொஞ்சம் தக்காளியும், பச்ச மிளகாயும் வாங்கிட்டு வாங்களேன்!" என்று மனைவி சொன்னதும், பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான், வாக்கிங் முடித்து விட்டு வந்த ரமணன்.
*****

சாட்சி
நடுரோட்டில் நடந்த கொலையைத் துல்லியமாகப் படமெடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்தவன், கோர்ட்டில் அளித்தான் பிறழ் சாட்சி.
*****

திருவிழா
"இதுதான் திருவிழாவா?" என்றான் மகன், மூலைக்கு மூலை அவரவர்களும் அவரவர் விளம்பரத்திற்காக வைத்திருந்த "வரவேற்கிறோம்!" ப்ளக்ஸ்களைப் பார்த்து.
*****

பார்வை
"கார்ப்பரேசன் தண்ணி ப்ரியா கிடைச்சா இப்படித்தான்! குடிச்சிட்டு அங்கங்க பேஞ்சுட்டுப் போவானுங்க!" அலுத்துக் கொண்டார், கட்டணக் கழிப்பிடமும், அருகே வாட்டர் பாட்டில் சகிதம் பெட்டிக்கடையும் வைத்திருந்த ஏகாம்பரம்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...