26 Dec 2016

வரம்


கவனம்
வெங்காய தாமரை
கழிவுகள்
கச்சடாக்கள்
நாப்கின்
ஆணுறைகள்
பிய்ந்த தலையணைகள்
மற்றும்
மெத்தைகள்
என
எவ்வளவோ கிடந்தும்
கவனம் பெறாத
ஊர்கோடி கிணறு
கவனம் பெற்றது
பிணம் ஒன்று
மிதந்த போது!
*****

வரம்
சிங்கம்
புலி
சிறுத்தைகளுக்குத்
தராத
வரமொன்றைத் தந்தார்
கடவுள்
காடிழந்த யானைகளுக்கு
கோயில் புகலிடம்!
*****

விபத்து
அர்விந்த சாமி போன்ற
மாப்பிள்ளையும்
ஐஸ்வர்யா ராய் போன்ற
பெண்ணையும்
துரதிர்ஷ்டசாலியாக்கி விடுகிறது
விவாகரத்து!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...