6 Dec 2016

இறைவா! உனக்கு மனநிறைவா?!


இறைவா! உனக்கு மனநிறைவா?!
(தமிழகத்தின் மார்க்ரெட் தாட்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு)
அம்மா என்றழைக்க
உனக்கொரு அம்மா இல்லை என்று
அம்மாவை அழைத்துக் கொண்டாயோ இறைவா!
மண்ணுலகம் ஆண்டது போதும் என்று
விண்ணுலகை ஆள அழைத்துக் கொண்டதுதான்
இறைவா! உனக்கு மனநிறைவா?

நிலையில்லா வாழ்க்கைக்கு
விலையில்லா திட்டங்கள் தந்தவரை,
பிழையில்லா உலகுக்கு
குறையில்லா தேவதையாய் வந்தவரை,

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
என்று கேட்டு
சாதனைகள் செய்ய வைத்தவரை,
இருப்பீர்கள்! துணை இருப்பீர்கள்!
என்று நம்பி இருந்தவர்களை
இன்று கண்ணீர் மழை பெய்ய வைத்தவரை,

மக்களால் நான்
மக்களுக்காக நான் என்றவரை
மறுஉலகுக்குக் கொடுப்பதா?
மரணம் வந்து அவரைத் தடுப்பதா?

அண்ணா என்ற மூன்றெழுத்தை
அன்று பறித்த போதும் ஆற்றியிருந்து,
எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தை
பின்பு பறித்த போதும் ஆற்றியிருந்து,
அம்மா என்ற மூன்றெழுத்தை
இன்று பறிக்கும் போதும்
எப்படி ஆற்றியிருப்பது?
எமன் என்ற மூன்று எழுத்தை
எப்படி பொறுத்திருப்பது?!

மழைநீர் வெள்ளத்திலிருந்து
தப்பி விட்டோம் என்றிருந்த தமிழகத்தை
கண்ணீர் வெள்ளம் வந்து மூழ்கடிப்பதா?
கதறி அழும் கண்கள் குருதி வடிப்பதா?

எதையும் தாங்கும் இதயமும்
இதையும் தாங்குமோ?
ஏழேழு பிறவிகள் எடுத்தாலும்
ஆறாத துயரம் நீங்குமோ?!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...