18 Dec 2016

வார்தா புயல் - கருத்து விளக்கம்


வார்தா புயல் - கருத்து விளக்கம்
            வார்தா புயலுக்குப் பிறகு, "சென்னை எப்படி இருக்கிறது?" என்று அண்மையில் சென்னையில் உள்ள உறவினர் ஒருவரிடம் செல்பேசியில் கேட்ட போது, அவர் இப்படிச் சொன்னார், "இன்னும் ஒரு நாள் எக்ஸ்ட்ரா புயல் அடிச்சிருந்தா, பாதிக்கு மேல செத்துப் போயிருப்பானுங்க! அடிக்காமே போயிட்டே!"
            எவ்வளவு நல்ல மனசு பார்த்தீங்களா? சென்னையில் வீடு, வாசல், கார் என்று வசதியாக செட்டில் ஆனவர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மழை பொழியாமல், சென்னையில் மட்டும் மழை பொழிவதற்குக் காரணம், இப்படிப்பட்ட நல்லவர்கள் அங்கு தொடர்ந்து இருப்பதுதான்!
*****
ஸ்பெஷல் டோர் டெலிவரி
            பெரும்புள்ளிகளின் வீடுகளிலிருந்து கத்தை கத்தையாக வெளிவரும் பணம், கொஞ்சம் ஏ.டி.எம்.மிலும் வந்தால் நன்றாக இருக்கும். எந்த பெரும்புள்ளியையும் பேங்கிலே, ஏ.டி.எம்.மிலோ பார்க்க முடியவில்லை. அவர்களிடம் கத்தை கத்தையாக ரெண்டாயிரம் நோட்டுகள் எப்படி பிடிபடுகிறது? அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் டோர் டொலிவரி செய்கிறார்களே நியாயமாரே!
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...