18 Dec 2016

நீரின்றி அமையாது உலகெனின் . . .


நீரின்றி அமையாது உலகெனின் . . .
            2016 - இவ்வாண்டின் நிறைவில் நின்று பார்க்கும் போது,
            இவ்வாண்டில் நடைபெற்ற தேர்தல் கூட்டங்களில் தவித்த வாய்க்கு குடிக்க நீரின்றி மயக்கமடித்து உடலில் நீர் வற்றி இறந்து போயிருக்கிறார்கள்!
            தமிழக முதலமைச்சர் அவர்கள் நீர்ச்சத்துக் குறைவினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 70 நாள்கள் போராட்டத்திற்குப் பின் இறந்திருக்கிறார்!
            காவிரி ஆறும் நீர்ச்சத்து குறைவால் படுத்து விட்டது.
            வடகிழக்குப் பருவமழைக்கும் சந்தேகமில்லாமல் நீர்ச்சத்து குறைவுதான். இன்னும் 60 விழுக்காடு பெய்யவில்லை என்கிறார்கள்.
            தண்ணியில கண்டம் என்பார்கள். இது தண்ணி இல்லாமல் ஏற்பட்ட கண்டம்!
            நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்?
            இவ்வளவுக்கும் மத்தியில் டாஸ்மாக் தண்ணி மட்டும் வற்றவே இல்லை பார்த்தீர்களா?
            அநேகமாக ரெண்டாயிரம் நோட்டு வெளிவந்து அதை முதலில் பார்த்தவர்கள் டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களாகத்தான் இருப்பார்கள். ரெண்டாயிரம் நோட்டை எடுத்து நம் தமிழ்க்குடிமகன் முதலில் சென்று நின்ற இடம் அதுதான்.
            தொடர்ந்து, ரெண்டாயிரம் நோட்டை எடுத்துக் கொண்டு தமிழ்ப்பெருங்குடி மக்கள் செல்லும் முக்கிய இடமாக டாஸ்மாக் இருப்பதால், இப்போதும் பெரும்பாலான ரெண்டாயிரம் நோட்டுகள் ஏ.டி.எம்.களுக்கு அடுத்தபடியாக அங்குதான் செல்கிறது!
            நீரின்றி அமையாது... என்று தமிழ்ப்பெருங்கவிஞர் திருவள்ளுவர் எழுதிய குறளைச் சரியாகப் புரிந்து கொண்ட தமிழ்ப்பெருங்குடி சமூகமே உன்னைக் கண்டு வியக்கேன்! வியக்கேன்!
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...