25 Dec 2016

பைரவா! நியாயமா?


பைரவா! நியாயமா?
            வானம் பொதுவாக இருக்கட்டும்!
            அங்கே அனைத்துப் பறவைகளும் பறக்கட்டும்!
            ராஜாளிகள் இருக்கின்றன என்பதால்
            சிட்டுக்குருவிகள் பறக்க
            144 தடை உத்தரவு போடக் கூடாது!
பொதுவாக நாய்களின் குணம் விரட்டியடிப்பது. தன் எஜமானர் தவிர வீட்டில் யாரையும் அது அண்ட விடாது. "நாய்கள் ஜாக்கிரதை" என்ற போர்டு இப்படித்தான் பிரபலமானது.
            இப்போது பொங்கலுக்கு ரிலீஸாகப் போகும் படங்களுக்கு மத்தியில் "பைரவா ஜாக்கிரதை" என்ற போர்டு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
            பைரவா என்றாலும் நாய் என்றுதான் அர்த்தம். இதனால் மற்றப்படங்கள் பொங்கல் ரிலீஸிருந்து ஒதுங்கி இருக்கின்றனவாம்.
            பல படங்களில் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் இளைய தளபதி விஜய் அவர்களின் படமே இப்படி அநியாயமான முறையில் வெளியாகலாமா?
            சாலையில் ஒரு சொகுசு கார் செல்கிறது என்பதற்காக, அந்தச் சாலையில் சைக்கிளில் யாரும் செல்லக் கூடாது என்பது போல இருக்கிறது இது.
            இது குறித்து தன் முதல் எதிர்ப்பை நாசுக்காக தனது டிவிட்டர் தளத்தில் பதிவு செய்திருக்கிறார் அருண் விஜய்.
            இதனால் தன்னுடைய "குற்றம் 23" என்ற திரைப்படம் திரையிடப்படுவதில் தடையேற்பட்டுள்ளதாக அவர் டிவீட்டியுள்ளார். இதை குற்றம்-24 ஆக எடுத்துக் கொண்டு இதையும் உங்கள் படத்துக்குள் நுழையுங்கள் அருண் விஜய்.
            மேலோட்டமாக பார்த்தால் இது இரண்டு விஜய்களுக்கான (விஜய் & அருண்விஜய்) போராட்டம் போல தெரிந்தாலும், இது காலம் காலமாக திரையுலகம் எனும் நிழலுலகில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிஜப்போராட்டம்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...