29 Dec 2016

ட்வி(ஸ்)ட்


புதையல்
அனாதை ஆசிரமத்தில் நடைபெற்ற மரம் நடு விழாவுக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் தட்டுப்பட்டன முப்பது குழந்தைகளின் மண்டை ஓடுகள்.
*****

முன் பின்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப் பயிற்சி தந்த கிராமத்திற்குள், இப்போது ஆயுதங்களோடு புகுந்தது ராணுவம்.
*****

ட்வி(ஸ்)ட்
நேற்றிரவு, மனப்பிறழ்வுக்கான டி.என்.ஏ. பார்டிகிளைக் கண்டுபிடித்து விட்டேன்!" என்று டிவிட் செய்த டாக்டர் மனத்துணைநாதன் மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...