வீடில்லாதவர்கள் & வீடிருந்தும்
கழிவறை இல்லாதவர்கள்
வர்தா புயலுக்கு வந்த
அறிவிப்புகளில் ஒன்று "பாதுகாப்பாய் வீட்டில் இருங்கள்!" என்று. வீடில்லாதவர்கள்
என்ன செய்வார்கள்? வர்தா புயலால் வீட்டை இழந்தவர்கள் எங்கு இருப்பார்கள்?
வர்தா புயலை விட பெருங்கொடுமை
வீடில்லாமல் ப்ளாட்பாரங்களிலும், சந்து பொந்துகளிலும், இண்டு இடுக்குகளிலும் ஒதுங்கி
வாழ்பவர்களின் வாழ்வு. வர்தா புயலுக்கான மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்படும்
அதே பொழுதில், வீடில்லாமல் தவிக்கும் அவர்களுக்கு சமாதானக் கால அடிப்படையிலாவது ஒண்டியிருக்க
எதாவது செய்து கொடுத்தால் பரவாயிவல்லை.
உணவில்லாமல் தவிப்பதைக்
கூட மக்கள் பொறுத்துக் கொள்வார்கள். நெட்வொர்க்
இல்லாமல் இருப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த நெட்வொர்க் இல்லாவிட்டாலும்
பல விசயங்கள் வெளிச்சத்திற்கு வராது.
நெட்வொர்க்கை விரும்பும்
அளவுக்கு மக்கள் ஏன் பிற விசயங்களை விரும்ப மாட்டேன்கிறார்கள் என்று புரியவில்லை. எடுத்துக்காட்டாக
கிராமங்களை எடுத்துக் கொண்டால் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒருவரின் வீட்டில் கழிவறை
இல்லை.
குறைந்த விலை செல்போன்களைக்
கொடுக்கும் அம்பானிகள் குறைந்த விலை கழிவறைக்கான எந்த அறிவிப்புகளையும் வெளியிட்டதில்லை.
ஆக, நம் நாட்டில் இரண்டு
விதமான பிரச்சனைகள் இருக்கின்றன.
1. வீடின்மை அதாவது,
உறைவிட வசதியின்மை இன்றி வாழ்பவர்கள்
2. வீடிருந்தும் கழிவறை
இன்மை அதாவது, வீடிருந்தும் போதிய சுகாதார வசதியின்றி வாழ்பவர்கள்
இப்படி,
நாட்டில் கழிவறைகள்
இல்லாமல் கோடானு கோடி மக்கள் வசிக்கும் போது, ஒரு பிரமுகரின் வீட்டின் கழிவறையிலிருந்து
கோடி கோடியாகப் பணம் கைப்பற்றப்படுகிறது.
கழிவறையிலிருந்து கைப்பற்றப்பட்ட
அந்தப் பணத்தைக் கொண்டு கோடானு கோடி கழிப்பறைகளைக் கட்டிக் கொடுக்கலாம். ஆனால்
அவர்களுக்கு பணத்தைக் கழிவறையில் வைக்க மனம் வருமே தவிர, கழிவறைகளை கட்டித் தர மனம்
வராது.
ஏன் என்கிறீர்களா? எல்லாருக்கும்
கழிவறை இருந்து விட்டால், எல்லாரும் அவர்கள் போல் அங்கு பணத்தைப் பதுக்கி வைக்க ஆரம்பித்து
விடுவார்கள் அல்லவா!
*****
No comments:
Post a Comment