5 Dec 2016

சைத்தான்


சைத்தான்கே  பஜ்ஜா!
முடியாது என்பது
முட்டாள்களின் அகராதியில்
என்றவரிடம்தான் கேட்டேன்
ரெண்டாயிரத்துக்கு சில்லரை!
***
எப்படிப்பட்ட பில்லிசூன்யத்தையும்
எடுப்பேன் என்றவரிடம்தான் கேட்டேன்
பேங்கில் டெபாசிட் பணத்தை
ஒரே கிளியரிங்கில்
எடுத்துத் தரச் சொல்லி!
***
தலைச்சன் பிள்ளை
மண்டையோட்டிலிருந்து
மை எடுத்த மந்திரவாதியிடம்தான்
காட்டினேன்
மை வைத்த விரலை!
அவன் மிரண்டோடிய இடம்
இன்னும் தெரியவில்லை!
*****

மிஷின்  வரிசையாளர்கள்!
வரிசையில் நின்று
ரேஷன் வாங்கியதில்லை
வரிசையில் நின்று
நிவாரணம் பெற்றதில்லை
வரிசையில் நின்று
டிக்கெட் வாங்கியதில்லை
வரிசையில் நின்று
எதையும் பெற்றதில்லை
அங்கெல்லாம் இருந்தது
மனிதர்கள் என்பதாலோ என்னவோ
ஒரு ஏ.டி.எம். மிஷின் முன்
வரிசையாக நிற்கிறோம்
காத்திருக்கிறோம்
அது தரும் பணத்தைப் பெறுவதற்காக
நெடுநேரம் வரிசையில் நின்று!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...