5 Dec 2016

இவைகள் தலைப்புச் செய்திகள் அல்ல . . .


இவைகள் தலைப்புச் செய்திகள் அல்ல . . .
            உடனடியாக தொழிலதிபராகி உலகின் நம்பர் ஒன் பணக்காரராக ஆசைப்பட்ட சஞ்சய் ராமசாமி ஏ.டி.எம். மையங்கள் அருகில் மூட்டுவலி தைலக்கடை ஆரம்பித்து பில் கேட்ஸையும், வாரன் பப்பெட்டையும் சொத்து மதிப்பில் முந்துகிறார்.

            உடல் தகுதித் தேர்வில் தேர்வு பெறாதவர்கள் ஏ.டி.எம். முன்னும், வங்கி வரிசைகளிலும் நிற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உலக மருத்துவ நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து திடீர் அறிவிப்பு.

            பள்ளி முன் ஏ.டி.எம். மிஷினின் மாதிரியை நிறுவி மாணவர்களுக்கு வரிசையில் செல்வதைக் சொல்லித் தரும் பணங்கெடுத்தான்பட்டி பள்ளியில் புதிய கற்பித்தல் உத்தி.

            "‍இரண்டாயிரம் ரூபாயை எப்படி ஒரு ரூபாய் சில்லரையாக மாற்றுகிறார்?" சிவாஜி பார்ட் டூ எடுக்க தயாராகி விட்டதாக பிரபல இயக்குநர் அறிவிப்பு.

            "யார்யா அந்த ஏ.டி.எம்? அவனுக்கு மட்டும் எப்படி அவ்வளவு கூட்டம் கூடுது?" என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ளும், கட்சிக் கூட்டத்துக்கு கூட்டத்தைத் திரட்ட முடியாத வெ.மு.க. கட்சியின் தலைவர் ரமணாசிங் ஆதங்கம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...