14 Dec 2016

பதின்பருவம்


ஆரம்பம்
"காலேஜ்னா இவ்வளவு கூட்டம் இருக்குமா?" ஆச்சர்யப்பட்ட தலைவர் உடனடியாக கட்சியைக் கலைத்து விட்டு, காலேஜ் ஆரம்பித்தார்.
*****

கண்டிப்பு
"எப்போதும் விளையாட்டுதானா?" என்று அக்கா பையனைக் கண்டித்து விட்டு மொபைலில் கேம்ஸ் ஆட ஆரம்பித்தான் மோகன்.
*****

சளி
"ஐஸ்கிரீம் சாப்பிட்டா சளி பிடிக்கும்!" என்ற அப்பாவிடம், "சளி பிடிக்காத ஐஸ்கிரீமாக வாங்கிக் கொடு" என்றாள் அம்முக்குட்டி.
*****

வயது
அண்மையில் கட்சியில் பதவியேற்ற இளைஞரணித் தலைவருக்கு வயது அறுபத்து எட்டு.
*****

பதின்பருவம்
"இனி லைசென்ஸோட அந்த மாதிரி படம் பார்க்கலாம்!" என்றான் பதினெட்டைக் கடந்த ஹரீஷ்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...