14 Dec 2016

விவசாயி ஓர் அதிர்ஷ்டசாலி


துவக்கங்கள்
அது
அப்படித் துவங்குவது
சரியாகப் படவில்லை
என்பது கூட
பரவாயில்லை.
தவறாக நினைக்கிறோம்
என்று தெரிந்தும்
அது அப்படித் துவங்கியது.
அது அப்படித்தான்
துவங்கும்,
சரியாக நினைக்கிறோமோ
தவறாக நினைக்கிறோமோ
என்பதைப்
பொருட்படுத்தாமல்!
*****

விவசாயி ஓர் அதிர்ஷ்டசாலி
நல்ல வேளையாக
அனைவரும் பார்க்க
ஒரு மரத்தின் மேலேறி
துண்டால் தூக்கிலிட்டுக் கொண்ட
அந்த விவசாயி ஓர் அதிர்ஷ்டசாலி!
இல்லையென்றால்,
அமளியாவது
துமளியாவது
இயற்கை மரணமென்று
கதை முடிந்திருக்கும்!
*****

காரணங்கள்
எப்படியோ ஆரம்பித்து
எப்படியோ முடிந்து விட,
அதன் பின்
கவிப்பேரரசர்களைப் போல
விளக்கமாய் விளக்கிச்
சொல்வார்கள்,
கற்பனையில் கூட எட்டாததைச்
செய்ததற்குக்
காரணங்கள் என்று!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...