ரோஜா மரங்களைப் பறித்தது!
டிசம்பர் மாதம் என்றால்
இயற்கையின் கோர தாண்டவம்தான் நினைவுக்கு வருகிறது. சென்ற வருடம் பெரும் வெள்ளம் என்றால்,
இந்த வருடம் பெருங்காற்று.
இயற்கை கோர தாண்டவம்
ஆடி விட்டுதான் ஒன்றைக் கொடுக்கிறது. வர்தா புயலாய் வீசிய இயற்கைதான் சென்னை ஏரிகளை
நிரப்பியிருக்கிறது.
ஆக மழை பெய்தால் நிரம்புவதற்கு
ஏரி இருக்க வேண்டும். இனியும் ஏரிகளைக் கூறு போட்டால் இயற்கை நமக்கு சோறு போடாது.
லட்சத்திற்கு மேற்பட்ட
மரங்களைப் பிய்த்தும், சாய்த்தும் விளையாடியிருக்கிறது வர்தா புயல். வர்தா என்றால்
சிவப்பு ரோஜா என்கிறார்கள். ரோஜா மரங்களைப் பறித்த வினோதம் இந்தப் புயல்.
இந்தப் புயல் மரங்களைச்
சாய்க்கலாம்! மனிதத்தைச் சாய்க்க முடியாது!
*****
இன்னொரு சோ!
சின்னம்மா சசிகலா அவர்களை
இந்து ராம் சந்தித்ததாக ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள்!
சோ மறைந்து விட்டார் என்று யார் சொன்னது? இன்னொரு
சோ உருவாகி விட்டார்.
*****
உங்க டாய்லெட்ல பணம் இருக்கா?
உங்க டாய்லெட்ல பணம்
இருக்கா?
நம்ம நாட்டுல டாய்லெட்டே
இல்ல பல கோடி பேருக்கு! டாய்லெட் என்ன, வீடே இல்லாமல் ப்ளாட்பாரத்தில் இருப்பவர்கள்
எத்தனை கோடி பேர்?
கர்நாடக தொழிலதிபர்
ஒருவரின் வீட்டுக் கழிவறையில் கோடி கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.
அங்கெல்லாமா பணத்தை பதுக்குவார்கள்?
நாமெல்லாம் கழிவறையை
எப்படிப் பயன்படுத்துகிறோம், அவர் எப்படி கழிவறையைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பாருங்கள்.
அதனால்தான் நாம் இன்னும் சாமான்யர்களாக இருக்கிறோம். அவர் தொழிலதிபராக இருக்கிறார்!
அதுசரி, அவர் இப்படி
கழிவறைகள் தோறும் பணத்தைப் பதுக்கி வைத்தால் டாய்லெட் எங்கே போவார்? இவர் ஸ்வட்ச்
பாரத் திட்டத்தையே கிண்டலடிப்பதாகத்தான் படுகிறது!
*****
No comments:
Post a Comment