25 Dec 2016

பசி


அட்டம்ப்ட்
"சூசைட் அட்டெம்ப்ட்!" என்று மருத்துவக் கல்லூரிக்குத் தூக்கி வந்தார்கள். மருத்துவக் கல்லூரியே பரபரப்பாக இருந்தது, "மூன்று மருத்துவ மாணவர்கள் தற்கொலை!" என்று.
*****

அனாதை
சில்லரைகளாய் ஆயிரத்து இருநூறு பணம் சேர்த்துக் கொடுத்தவனை ஒதுக்க முடியவில்லை அனாதைப் பிணம் என.
*****

ஹோம் ஒர்க்
"ஹோம் ஒர்க்னா என்னக்கா?" என்ற கேட்ட தம்பிக்குச் சொன்னாள் அக்கா சுப்ரியா, "டியூசன்ல செய்யுறது!"
*****

பசி
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் பசியோடு கடந்து கொண்டிருந்தார் அதற்கு நிலம் கொடுத்த விவசாயி.
*****

ஒரு நாள்
"ஒரு நாள் நானும் அமைச்சராகி மேசையைத் தட்டுவேன்!" மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டான், பெஞ்ச் மீது ஏறி நின்ற மாணவன்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...