மகுடஞ்சாவடியா? மனிதச்சாவடியா?
காலன்
என்றால் எமன்.
காலன்
என்ற சொல்லில் "வ" சேர்த்தால் காவலன் ஆகும்.
காவலன்
என்ற சொல்லில் "வ" வை எடுத்தால் காலன் ஆகும்.
காவலன்
காலன் ஆனால் . . .
அப்படி
ஒரு சம்பவம் மகுடஞ்சாவடியில் நிகழ்ந்திருக்கிறது.
ஊர்ப்
பெயர் மகுடஞ்சாவடி என்று இருப்பதால் - அங்கிருந்த காவலர்கள் வாகன சோதனையின் போது
- சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் லத்தியைச் செருகி - வாகனத்தில்
சென்றவரை நிலை தடுமாறச் செய்து - எதிரில் வரும் வாகனத்தை மேலேற வைத்து - சாவடித்திருக்கிறார்கள்.
வாகனச்
சோதனை என்பது பாதுகாப்பான பயணத்திற்கா? பாதுகாப்பற்ற மரணத்திற்கா? இது மரண வேதனை தரும்
வாகனச் சோதனை!
இப்படி
அந்நியன் அவதாரத்தோடு காவலர்கள் கருடப் புராணத்தைக் கையில் எடுத்து வாகனச் சோதனை
செய்தால் நாமெல்லாம் இரு சக்கர வாகனத்தைக் கைவிட்டு குழந்தைகள் ஓட்டும் மூன்று சக்கர
வண்டியில்தான் செல்ல வேண்டும். அதுதான் பாதுகாப்பானது. நிலைதடுமாறி விழாமல் இருக்க
வசதியாக இருக்கும்.
இரு
சக்கர வாகனம் என்பதால் இப்படி லத்தியை விடுபவர்கள், நான்கு சக்கர வாகனம் என்றால் சூட்டிங்
ஆர்டர் கொடுப்பார்களோ?!
கொடுத்தாலும்
கொடுப்பார்கள்!
உத்திரப்
பிரதேசத்தைக் கவனித்தீர்களா?
பணம்
எடுக்க வரிசையில் நின்ற போது ஏற்பட்ட கலாட்டாவைக் கலைக்க ஒரு போலீஸ்காரர் வானத்தை
நோக்கிச் சுட்டு இருக்கார்.
பணம்
எடுக்கப் போறது ஒரு குத்தமா என்ன?
அவனவனும்
ரெண்டாயிரம் நோட்டுகளை எப்படி எப்படியோ சுருட்டிக் கொண்டு சுட்டுக் கொண்டு இருக்கிறான்.
இந்த போலீஸ்காரர் வானத்தை நோக்கிச் சுட்டு இருக்கிறார்.
நல்லவேளையாக
போலீஸ்காரர்களுக்குப் பீரங்கிகள் கொடுக்கப்படவில்லை சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டும்
நாம்.
*****
No comments:
Post a Comment