4 Dec 2016

சர்வதேசத் தரம்


சர்வதேசத் தரம்
எதையும் சர்வதேசத் தரத்தில் சிந்திக்கும் தலைவர்க்கு ஸ்விஸ் பேங்கில் ஒரு அக்கெளண்ட்.
*****
வேண்டுதல்
"சாமிகிட்ட என்னடா வேண்டிகிட்டே?" என்ற கேட்ட சஞ்சயிடம் பரத் சொன்னான், "எங்கப்பா சீக்கிரமே ஜாமீன்ல வெளிய வரணும்!"
*****

திருட்டு
"பையில இருந்த பத்தாயிரம் உருப்படியையும் எவன் திருடிட்டுப் போனானோ?!" சோர்ந்து உட்கார்ந்திருந்தான் திருட்டு டிவிடிக்காரன்.
*****

விலை
பத்தாண்டிற்கு முன்பிருந்த விலையைத் தொட்டது கச்சா எண்ணெய். 38 பைசா பெட்ரோலும், 24 பைசா டீசலும் விலை குறைக்கப்பட்டது இந்தியாவில்.
*****

தண்ணீர்
மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகவும் இருக்கலாம் என்று பேசினார்கள் உலகத் தலைவர்கள். ஊழிப் பெருவெள்ளம் வந்து அழித்தது உலகை.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...