29 Dec 2016

சேஞ்ச் வேணும்!


சேஞ்ச் வேணும்!         
            இது முற்பிறவியில் சமத்து சம்புலிங்கம் அவர்கள், மன்னர் காலத்தில் புலவராக இருந்த போது நிகழ்ந்தது. அதை இன்றும் அவர் மறக்காமல் ஞாபகம் வைத்து இருக்கிறார்.
            அவர் மன்னரைப் புகழ்ந்து பாட அரண்மனை சென்றார். மன்னரை புகழ்ந்து பாடி மன்னரின் சன்மானத்தையும் பெற்றுக் கொண்டார்.
            பெற்றுக் கொண்டவர்,  "மன்னா! எனக்கு சேஞ்ச் வேணும்!" என்றார்.
            "சரி! இன்றிலிருந்து என்னை புகழ்ந்து பாட வேண்டாம்! கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் மன்னர்.
            ஸ்தம்பித்து போன சமத்து சம்புலிங்கப் புலவர், தயங்கியபடியே மன்னரிடம் சொன்னார், "மன்னா அதில்லை. தாங்கள் சன்மானமாகக் கொடுத்த ரெண்டாயிரம் நோட்டுக்கு சேஞ்ச் வேணும்!"
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...