29 Dec 2016

ஏ.டி.எம். பிரச்சனைக்குத் தீர்வு


ஏ.டி.எம். பிரச்சனைக்குத் தீர்வு
            இனியும் ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லையென்றால் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்ற நிலையில் அழைக்கப்பட்டு இருந்தார் சமத்து சம்புலிங்கம். அவரிடமிருந்து நிலைமையைச் சமாளிப்பத்தற்கான ஐடியா வெளிப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
            சமத்து சம்புலிங்கம் அங்கிருந்த அனைவரிடமும் ஏ.டி.எம்.மின் இயக்க முறைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்.
            நெற்றியைச் சுருக்கிய படியே சில நொடிகள் யோசித்தவர், பிறகு பேசத் தொடங்கினார், "பணம் கொடுக்காத இந்த பழைய ஏ.டி.எம்.களை அகற்றி விட்டு, பணம் கொடுக்கக் கூடிய தரமான புதிய ஏ.டி.எம்.களை வெளிநாட்டிலிருந்து வரவழைப்பதைத் தவிர வேறு வழியில்லை!"
*****

No comments:

Post a Comment

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? நேற்றைய விவாதத்தை நாம் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழ...