11 Dec 2016

கடற்கோள்


கடற்கோள்
"ஊரெல்லாம் வெள்ளமா இருக்குடா!" அம்மா ஸ்கைபில் சொன்னதும், "மை காட்! கடற்கோள் எப்படி அறிவிக்காம விட்டாங்க?" பதறினான் நாசா விஞ்ஞானி மாதவன் குப்புசாமி.
*****

நிவாரணம்
"நிவாரணம் ஐயாயிரம்!" என்று அறிவித்த கெளன்சிலர், அனைவர்க்கும் நாலாயிரம் கொடுத்தார்.
*****

சாரி!
ஆசையோடு நெருங்கி வந்தவன் கடைசி நொடியில் சொன்னான், "சாரி! ஐ லாஸ்ட் மை காண்டம்!"
*****

நிலைமை
"நம்ம நிலைமை இப்படியா ஆகணும்?" வெள்ளத்தில் நீந்தி வந்து வாங்கிய குவார்ட்டரை இடுப்பில் செருகியபடி நீந்தத் தொடங்கினர் பாண்டியும், சேகரும்.
*****

கிளம்புங்க சீக்கிரம்!
"ஏரியைத் திறந்துட்டாங்களாம்! ம்! சீக்கிரம் கிளம்புங்க!" என்றதும், ஏன் ஆபீஸிருந்து சீக்கிரம் கிளம்பினோம் என்றிருந்தது அசோக்கிற்கு.
****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...