12 Dec 2016

ரசீது


ரூல்ஸ்
நூறு ரூபாய் வாங்கிக் கொண்டதும் நோ என்ட்ரியில் போவதைக் கண்டு கொள்ளவில்லை அவர்.
*****

பாட்டு
"என்ன பாட்டுப் போடணும்?" என்ற தொகுப்பாளினியின் குரலுக்கு எதிர்முனையிலிருந்து பதில் வந்தது, "பீப் சாங்!"
*****

ரசீது
வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததும் அம்பலவாணன் பத்திரப்படுத்திக் கொண்டார் அடகுக்கடை ரசீதுகளை.
*****

இருப்பு
சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போன சித்தப்பாவின் செல்பேசி எண்ணை எப்போது அழைத்தாலும் சொல்கிறது, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக.
*****

ஒண்ணாகிட்டோம்
"எப்படியோ ஒண்ணாகிட்டோம்!" வாட்ஸ் அப்பில் பதிவிட்டு மகிழ்ந்தனர் வெவ்வேறு நாடுகளில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்.
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...