12 Dec 2016

காங்கிரீட் முளை


காங்கிரீட் முளை
ஏரோட்டியவன் இன்று
காரோட்டியாக இருக்கிறான்,
களை எடுத்தவன்
காவலாளியாக இருக்கிறான்,
நாற்றுப் பறித்தவள்
பெருக்கும் வேலை பார்க்கிறாள்,
அறுவடை செய்தவன்
ஏ.சி. ரிப்பேர் செய்கிறான்,
வைக்கோல் போர் போட்டவன்
ப்ளம்பிங் வேலை பார்க்கிறான்,
நீர் பாய்ச்சியவன்
பீட்சா டெலிவரி செய்கிறான்,
வயலிலிருந்து
மிகப்பெரிதாக முளைத்து விட்ட
அந்த
அபார்ட்மெண்டில்!
*****
பாடல் வரலாறு
கரகரக குரல்கள் கொண்ட
தவளையின் பாடல்கள்
தொடர்கின்றன.

இன்னிசைப் பாடல்களின் முன்பு
அவைகள்
இரைச்சல்களாகப் படலாம்.

தவளையின் பாடல்கள்
தலவரலாறு கொண்டது.

அபார்ட்மெண்டுகள் முளைத்து
அங்கு
மியூசிக் ப்ளேயர்களும்
5.1. ஸ்பீக்கர்களும்
வரும் வரையில்
அங்கு வயல்கள் இருந்தன.

வயல்களில் தவளைகள்
பாடிக் கொண்டிருந்தன.

அதே தவளைகள்
அபார்ட்மெண்டிலும்
பாடத்தான் செய்கின்றன
டிஸ்கவரி சேனலிலோ
அல்லது
நேஷனல் ஜியோகிராபி போன்ற
சேனல்களிலோ!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...