13 Dec 2016

தமிழன் எனப்படுபவன் . . .


தமிழன் எனப்படுபவன் . . .
விவசாயம் செய்து
தற்கொலை செய்து கொள்வான்
மீன் பிடிக்கச் சென்று
இலங்கை கடற்படையால் சூடுபடுவான்
சற்றே வடக்கே சென்று
ஆந்திர போலீசுக்கு
என்கெளண்டராவான்
காவிரி நீர் கிடைக்காமல்
கொக்கோ கோலா அருந்துவான்
முல்லை பெரியாறு நீர் கிடைக்காமல்
பதினொரு மணி மலையாள சினிமா பார்ப்பான்
வெளிநாட்டு வேலைக்குச் சென்று
ஏமாற்றப்பட்டுத் திரும்புவான்
தமிழன் எனப்படுபவன் . . .
*****

ஆச்சர்யங்கள்
பார்க்க
ஆச்சர்யமாக இருக்கிறது
வெள்ளை செம்பருத்தி மலர்

பார்க்க
ஆச்சர்யமாக இருக்கிறது
சிவப்பு செம்பருத்தி மலர்

பார்க்க
ஆச்சர்யமாக இருக்கிறது
அடுக்குச் செம்பருத்தி மலர்

பார்க்க
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது
ஆச்சர்யமாகப் பார்ப்பது!
*****

இரகசியங்கள்
"தயவுசெய்து
இதை வெளியில விட்டுராதீங்க!"
என்கிறேன்
என்னால்
அவரிடம் சொல்லாமல்
காப்பாற்ற முடியாத
அந்த ரகசியத்தை!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...