3 Dec 2016

குத்திய பின்...



உடைதல்
உடையாது என்று நினைத்திருந்தேன்
சில வார்த்தைகளுக்கே
‍உடைந்துப் போகும் மனதை!
*****

நேரங்கள்
நாலு பேர்
வந்து கேட்டால்தான்
நல்ல நேரம் ஆரம்பிக்கும்
ஜோசியருக்கு!
*****

குத்திய பின்...
டகு வைத்த பின்...
காதில் குத்திய
வேப்பங்காம்பு
அடிக்கடி நினைவூட்டுகிறது
பிரமாண்டமாய் நடந்த
காதணி விழாவை!
*****

நிலைமைகள்
எந்நேரத்திலும்
நைந்துப் போய் தொங்கும்
கயிறு அறுந்து
விழக் கூடும்
எல்லாரையும் பயமுறுத்தியபடி
தொங்கிக் கொண்டிருக்கும்
திருஷ்டி பொம்மை!
*****

சிக்குதலின் சிரிப்பு
தொண்டையில் சிக்கிய
மீனின் முள்
சிரித்திருக்கக் கூடும்
தூண்டில் முள்ளில்
சிக்கிய பொழுதை நினைத்து!
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...