18 Nov 2016

காபி மேக்கர் ஐடியாக்கள்


மடமை என்பது அச்சமடா!
            எப்போதும் சிம்பு படம்தான் சீக்கிரம் ரிலீசாகாது. இப்போது சிம்பு படம் சீக்கிரம் ரிலீசாகி விட்டது. ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள்தான் சீக்கிரம் ரிலீஸாக மாட்டேங்குது.
            எப்போதும் கலகலப்பாக இருக்கும் சிம்புஜி இதில் தாடி வைத்திருப்பது ரூபாய் நோட்டு மாற்ற முடியாத சோகத்திற்கான சிம்பாலிக்காகவும் இருக்கலாம். என்றாலும், அதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன் என்று சொல்வதுதான் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் டைட்டில்.
            காசு இருந்த போதெல்லாம் சிம்பு படம் வரவில்லை. அதனால் அப்போது பார்க்க முடியவில்லை. இப்போது நோட்டு மாற்ற காசில்லை. அதனால் இப்போது
பார்க்க முடியவில்லை. இதற்கெல்லாம் அசராதவன் அன்பானவன் அடங்காதவன் சிம்புஜி என்பதால், சிம்புஜி ரசிகர்களாகிய யாங்களும் அசரோம்! அடங்கோம்! ஆனால் ஜி, சிம்புஜியின் அடுத்தப் படம் வரும் போது நூறு ரூபாய் நோட்டெல்லாம் செல்லாதுன்னு அறிவிப்பு வந்துடக் கூடாதுஜி!
*****

காபி மேக்கர் ஐடியாக்கள்
            ஒரு மென்மையான காதல், ஒரு முரட்டுத் தனம் சாப்ட்தனம் கலந்த ரெளடித்தனம் - இது இருந்தால் போதும், காபி மேக்கரில் காபி போடுவது போல் கெளதமின் படங்களை நாமே உருவாக்கி விடலாம்.
            அப்புறம் பாஸ், அது ஏன் கெளதமின் ஒவ்வொரு படத்திலும் நாயகன் பைக்கோ அல்லது சைக்கோ முக்கியத்துவம் பெற்று விடுகிறது?
            துப்பாக்கி வாங்குவதற்கும், வைத்திருப்பதற்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள், லைசென்ஸ்களும் உள்ள ஒரு நாட்டில் வெளியாகும் கெளதமின் படங்களில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கும் தடைகள், லைசென்ஸ்கள் வர வேண்டும், அல்லது படத்தில் தற்போது கதை மாந்தர்கள் சுட்டுக் கொண்டிருப்பது தீபாவளித் துப்பாக்கி என்றாவது எச்சரிக்கை வாசகம் வர வேண்டும். துப்பாக்கிக் கலாச்சாரம் ரொம்ப மோசமானது பாஸ், அமெரிக்காவைப் பாருங்கள்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...