18 Nov 2016

குறையொன்றுமில்லை


குறையொன்றுமில்லை
நேர்த்திக் கடனுக்கான
நாள் வரும் வரை
அன்போடு வளர்ப்பதில்
குறையொன்றும் நேர்வதில்லை
கருப்பன் என்று
செல்லப் பெயரிட்டு
அழைக்கப்படும்
கிடாவிற்கு!
*****

பேசித் திளைத்தல்
பிணமான பின்
பலவாறாக
பேசிப் பார்த்தோம்
அவனைப் பற்றி
உயிருள்ள வரை
ஒற்றை வார்த்தை
பகிராத நாங்கள்!
*****

என் பெயர் தெரியும்
உன் மேல் உள்ள
மச்சம் ஒன்றிற்குத் தெரியும்
என் பெயர்!
*****

முளை
வெட்டப்படும் மரங்களருகே
முளை விடுகின்றன
விளம்பர போர்டுகள்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...