17 Nov 2016

புதிய நதி


புதிய நதி
ஓடிக் களைத்து விட்டது
காவிரி நதி!
உற்சாகமாக கரை புரண்டு
ஓடுகிறது
டாஸ்மாக் நதி!
*****

அறியும்
தவறி விழுந்த
ஒற்றைச் செருப்பே அறியும்
இணையைப் பிரிந்த ஏக்கம்!
*****

பின்தொடர்தல்
உயிருள்ள வரை
எட்டிப் பார்க்காத மனிதர்கள்
பின்தொடர்கிறார்கள்
பிணமான பின்
இறுதி ஊர்வலத்தில்!
*****

விற்பனை
பசியோடு நின்றவனிடம்
விற்கப்பட்டது
உலகின்
கடைசி வயல்
ப்ளாட் போடப்பட்டு!
*****

ஃ ஃ ஃ
குடிக்கும் வரை புரியவில்லை
குடித்த பின் தெரியவில்லை
கள்ளச் சாராயம்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...